Home /theni /

தேனி உத்தம்பாளையம் பகுதி ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

தேனி உத்தம்பாளையம் பகுதி ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

உணவுப்

உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி உணவகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் கெட்டுபோன உணவுகளை அப்புறப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uthamapalayam, India
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

திடீர் சோதனை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை பயன்படுத்தி, தரமற்ற உணவுகளை விற்பனை செய்வதாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு புகார் தெரிவித்து உள்ளனர்

பொது மக்கள் அளித்த தகவலின் பெயரில் உத்தமபாளையம் பகுதியில் உள்ள உணவகங்களில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் மதன்குமார் தலைமையிலான பணியாளர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை


ஆய்வின்போது உணவகங்களில் பழைய எண்ணெயில் பொறித்த கோழிக்கறி மற்றும் முன்தினம் சமைத்த பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தி குப்பை தொட்டியில் கொட்டினார்கள்.

சமையலறையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை


மேலும் உணவகங்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பெருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்து உணவு தயாரிப்பு பகுதியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, சரிவர செயல்படாத உணவகங்களுக்கு அபாராத தொகையை விதித்தனர். இந்த சம்பவத்தால் உத்தமபாளையம் பகுதி உணவகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி