முகப்பு /தேனி /

தேனி பளியங்குடியில் கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம்!

தேனி பளியங்குடியில் கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம்!

X
கண்ணகி

கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம்

Kannagi Temple Chitrai Festival At Baliangudi | தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் அருகே உள்ள பளியங்குடியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தமிழக - கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியிலுள்ள 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் மே 5ம் தேதி சித்திரை முழு நிலவு விழா, மங்கல தேவி கண்ணகி விழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பாகவே கூடலூர் அருகே உள்ள பளியன்குடி குடியிருப்பு பகுதியில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான கொடிமரம் நட்டு, கண்ணகி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில், பளியன்குடியில் கண்ணகி அறக்கட்டளையினர் சார்பாக கண்ணகி உருவம் பதித்த கொடியுடைய கொடிமரம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில், பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதில் கண்ணகி அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள், பளியங்குடி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni