முகப்பு /தேனி /

தேனியில் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி கொண்ட தீ - போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்...

தேனியில் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி கொண்ட தீ - போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்...

X
மரத்தில்

மரத்தில் தீ விபத்து  

  Theni News | பெரியகுளம் அருகே 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை 5 மணி நேரம் போராடி ஆலமரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தினர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை சோத்துப்பாறை அணை சாலையில் நந்தவனம் என்னும் இடத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பச்சை பசுமையான பெரிய ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தை 50க்கும் மேற்பட்டோர் சுற்றி நின்று பிடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய அகலமான ஆலமரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆலமரத்தின் உட்பகுதியில் இரவு தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை அடுத்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ ஆலமரத்தின் மிக உயரமான பகுதி முழுவதும் எரிந்ததால் நீரை பாய்ச்சியடிக்கும் போது தீ கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி ஆலமரத்தில் பற்றிய தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இரவு நேரம் என்பதால் ஆலமரத்தில் பற்றிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதா? என தீயணைப்புத் துறையினர் உறுதி கூற முடியாத நிலையில் காலையில் மீண்டும் வந்து ஆலமரத்தின் மீது ஏறி தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? தீ கசிவு இருக்கின்றதா? என சோதனை செய்து ஆல மரத்தின் பற்றிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்ய முடியும் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரத்தில் தீ பற்றி எரிந்தது எப்படி? யாரேனும் மரத்தை சேதப்படுத்த தீ பற்ற வைத்துள்ளார்களா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். பச்சை பசுமையான ஆலமரத்தில் தீ பற்றி எரிந்தது பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

First published:

Tags: Local News, Theni