தேனியில் விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் மகேந்திரன் என்பவர் விவசாயத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல தனது கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற பின்னர் அந்தக் கடையில் இரவு திடீரென்று எதிர்பாராத விதமாக தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட பொதுமக்கள் கடை உரிமையாளருக்கும், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிகப்படியான தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் உத்தமபாளையத்தில் இருந்து தீயணைப்புத் துறை வாகனத்தை வரவழைத்தனர். சுமார்இரண்டு தீயணைப்பு வாகனங்களைக் கொண்டுதீயை அணைக்க முயற்சி செய்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமலும்,அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில்எந்த ஒரு அசம்பாவிதம் நடந்துவிடாமலும் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேனியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.. வெற்றிபெற்றவர்களுக்கு எவ்வளவு பரிசு வழங்கப்பட்டது தெரியுமா?
செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni