முகப்பு /தேனி /

தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்.. எதற்கு தெரியுமா?

தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்.. எதற்கு தெரியுமா?

X
தேனி

தேனி விவசாயிகள்

Theni farmers | தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கடந்த சட்டமன்றத்தில் திமுக அரசு எந்தவித விவாதம் இன்றி நிறைவேற்றியது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற கோரி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனுஅளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கடந்த சட்டமன்றத்தில் திமுக அரசு எந்தவித விவாதம் இன்றி நிறைவேற்றியது எனவும்,எதிர்க்கட்சிகளிடம் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் இடம் எந்த வித கருத்தும் கேட்காமல் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான சட்டம் எனவும் தெரிவிக்கின்றனர்.

விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குட்டை குளம் வாய்க்கால் உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ளும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறும் சூழல் இருக்கின்றது.

தமிழ்நாட்டின் விவசாயிகளின் பட்டா நிலங்களை அபகரிக்க கூடிய ஆபத்து இச்சட்டத்தில் இருக்கின்றது எனவும் எங்கள் சங்கங்களின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற கோரி கோரிக்கை மனுவை அளித்துள்ளோம் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் .

மேலும் இந்தச் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் தமிழக முழுவதும் விவசாயிகளை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Theni