ஹோம் /தேனி /

சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு தயாரான பூக்கள்: குழப்பத்தில் தேனி விவசாயிகள்

சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு தயாரான பூக்கள்: குழப்பத்தில் தேனி விவசாயிகள்

தேனி

தேனி அறுவடைக்கு தயார் நிலையில் பூக்கள்

தேனியில் பண்டிகை நாட்களுக்கு முன்பே பூக்கள் அறுவடைக்குத் தயாரானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாட்களை ஒட்டி அறுவடைக்கு தயாராகும் வகையில் பயிரிடப்பட்ட செண்டு பூ மற்றும் செவ்வந்தி பூ பண்டிகை நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு தயாராகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பூக்கள் விவசாயம்

தேனி மாவட்டத்தில் சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வந்தி பூ, செண்டு பூ சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக கம்பம், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வந்தி பூ மற்றும் செண்டு பூ பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

விளைந்து நிற்கும் பூக்கள்

கேரள மாநில பண்டிகை மற்றும் கோயில் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கழுத மேடு கல்லுடைச்சான் பாறை, பெருமாள் கோயில், பலியங்குடி ஆகிய பகுதிகளில் அதிகளவு பூ விவசாயத்தை செய்து வருகின்றனர் விவசாயிகள்.

விளைந்து நிற்கும் பூக்கள்

கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் கோயில் திருவிழாக்களை ஒட்டி பூ விவசாயத்தில் இறங்கியதாக கூடலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

விளைந்து நிற்கும் பூக்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகை நாட்களில் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும். இந்த சமயத்தில் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும்.

விளைந்து நிற்கும் பூக்கள்

ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி அறுவடைக்கு தயாராகும் நிலையில் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செண்டு பூ மற்றும் செவ்வந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் கூடலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக பண்டிகை நாட்களுக்கு முன்கூட்டியே பூக்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

விளைந்து நிற்கும் பூக்கள்

தற்போது பூக்களின் விலை கிலோவிற்கு 30 ரூபாய் மட்டுமே கிடைப்பதால் , பூக்களை அறுவடை செய்யாமல் பண்டிகை நாட்களை எதிர்பார்த்து இப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

விளைந்து நிற்கும் பூக்கள்

இதுகுறித்து கூடலூர் பகுதியில் பூ விவசாயம் செய்யும் விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது கம்பம், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு பூ விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக பூ விவசாயம் செய்யும் விவசாயின் எண்ணிக்கையும் இந்த பகுதியில் அதிகரித்து வருகிறது. அதிகமான வரத்து இருப்பதால் பூக்களின் விலை தற்போது 30 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது. 10 கிலோ அறுவடை செய்யும் தொழிலாளிக்கு தினசரி கூலியாக 500 ரூபாய் வழங்க வேண்டி உள்ளது. பூக்களின் விலை தற்போது குறைந்துள்ளதால் அறுவடை செய்யலாமா வேண்டாமா என்று குழப்பத்திலேயே உள்ளோம்’ என்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni