தேனியில் ஐயப்பன் மீது கொண்டுள்ள அதீத பக்தி காரணமாக ஒற்றைக் காலுடன் நடைபயணமாக சபரிமலைக்கு பயணம் செய்து வருகிறார் மாற்று திறனாளி ஒருவர்.
கடந்து ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டிய ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் ஒற்றை ஆளாக சென்ற மாற்றுத்திறனாளியான சுரேஷ், இந்த ஆண்டு ஐயப்பன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்கிறார்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உலக புகழ்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சென்று வருவது வழக்கம். புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் 48நாள் விரதம் இருந்து, உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கடும் விரதத்தை மேற்கொண்டு கோவிலுக்கு செல்வர்.
இக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தில் செல்வது மட்டுமல்லாமல், சில ஐயப்ப பக்தர்கள் இறைவனை வேண்டி பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்கு செல்வதும் உண்டு. பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதலும், இறை பக்தியும் இருக்கும்.
ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாகக் கொண்டவர் சுரேஷ். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்று வீரியமாக இந்தியாவிற்குள் பரவுவதை கண்டு கொரோனா தொற்று முழுமையாக இந்தியாவில் இருந்து அழிந்து விட வேண்டும் என்ற நோக்கில் நெல்லூரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்தவர் மற்றுதிறனாளி சுரேஷ். இதன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்ற சுரேஷ், தற்போது தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் 130 கிலோமீட்டர் பாதயாத்திரையாக செல்ல தொடங்கி உள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒவ்வொரு நானும் பத்து கிலோமீட்டர் நடை பயணமாக மேற்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார். ஒற்றைக்காலுடன் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் நபரை கண்டு பலரும் வியந்து பாராட்டியும் வருகின்றனர்.
இது குறித்து பேசிய சுரேஷ், சிறு வயதிலிருந்தே கடவுள் பக்தி கொண்டவன் நான். ஆந்திர மாநிலத்தில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்த ஆண்டு பொதுமக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஐயப்பனை காண வேண்டும் என்பதற்காகவும் சபரிமலைக்கு நடை பயணமாக செல்கிறேன் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.