ஹோம் /தேனி /

தேனியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகங்களின் முகப்புகள் அகற்றம்

தேனியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகங்களின் முகப்புகள் அகற்றம்

X
தேனியில்

தேனியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Theni District News : தேனியில் சாலைகளை ஆக்கரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகளின் முகப்புகள் அகற்றப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி அருகே வடபுதுபட்டி ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் சாலை ஓரத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிரப்பால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி வந்ததாக புகார் எழுந்தது. பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களின் முகப்புகள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

வணிக வளாகங்கள் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசலும், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத சூழலும் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகள் அளவிடும் பணிகளை முடித்தனர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணி... கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இந்நிலையில், ஊராட்சி மன்றத்தலைவர் அன்னபிரகாஷ் தலைமையிலும் அல்லிநகரம் போலீசார் பாதுகாப்புடனும் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வணிகக் கடைகளில் முகப்புகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni