ஹோம் /தேனி /

தேனியில் ஊழியருக்கு 36 மாத சம்பளம் நிலுவை - கூட்டுறவு சங்க அலுவலகப் பொருட்கள் ஜப்தி

தேனியில் ஊழியருக்கு 36 மாத சம்பளம் நிலுவை - கூட்டுறவு சங்க அலுவலகப் பொருட்கள் ஜப்தி

X
ஜப்தி 

ஜப்தி 

Theni News : தேனி அல்லிநகர் கூட்டுறவு சங்கத்தில் பொருள்களை முன்னாள் ஊழியர் நீதிமன்ற உத்தரவுப் படி பறிமுதல் செய்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் வடபுதுபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 18 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்துள்ளார்.

ஓய்வு பெற்ற இவருக்கு 36 மாதம் சம்பள பாக்கி மற்றும் பி.எஃப்போனஸ் என 6.70 லட்ச ரூபாய் நிலுவைஇருந்து வந்துள்ளது. இந்த பணத்தை வழங்க கோரி மதுரை தொழிலாளர் நலவாரிய நீதிமன்றத்தில் முருகேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முருகேசனுக்கு வழங்கக்கூடிய தொகைக்கு ஈடாக அல்லிநகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : பார்த்தாலே எச்சில் ஊறும்... தேனியில் ஊறுகாய் விற்பனையில் அசத்தும் கேரள இளைஞர்..

அதன்படி தேனி மாவட்ட நீதிமன்ற அமீனா ரகுபதி ராமச்சந்திரன், வழக்கறிஞர் மாரியப்பன் தலைமையில் பாதிக்கபட்ட முருகேசன் முன்னிலையில் இன்று அல்லிநகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள பொருட்களான இரண்டு மேசை, நான்கு நாற்காலி இரண்டு கம்ப்யூட்டர், பிரிண்டர் மிசின், இரண்டு காத்தாடி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி ஜப்தி செய்தனர்.

First published:

Tags: Local News, Tamil News, Theni