Home /theni /

தேனியில் 30 நாட்களுக்கு பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - முழு விவரம் என்ன?

தேனியில் 30 நாட்களுக்கு பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - முழு விவரம் என்ன?

பதினெட்டாம்

பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர்

தேனி மாவட்டம் 18-ம் கால்வாய் நீர்வழி பாதையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் 18-ம் கால்வாய் நீர்வழிப் பாதையில் உள்ள தொட்டிப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு தொட்டி பாலம் சீரமைப்பு பணிகள் முடிவு பெற்றது.

தற்போது போடிநாயக்கனூர் பகுதி விவசாயம் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக 30 நாட்களுக்கு பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது .

பதினெட்டாம் கால்வாய்

முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீரை பிரித்து, போடி, தேவாரம் ஆகிய பகுதியில் பாசன வசதி பெறுவதற்காக, 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த கால்வாய் மூலம் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி, நிலத்தடிநீர் பெருகுவதோடு, நேரடியாக 4,614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் லோயர்கேம்ப் அருகே உள்ள தலை மதகில் இருந்து மானாவரி பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம்.

பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர்


தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், 18 ம் கால்வாயில் அதிக தண்ணீர் சென்றது. கம்பம் பகுதியில் இருந்து தேவாரம் பகுதிக்கு செல்லும் 18ஆம் கால்வாய் பகுதியின் நீர் வழித்தடத்தில், கம்பம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொட்டிப்பாலம் உள்ளது. இந்த தொட்டிப் பாலத்தின் வழியாகவே 18ம் கால்வாய் நீர் கோம்பை பண்ணைபுரம் தேவாரம் பகுதிக்குச் செல்லும்.

பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர்


உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 18ம் கால்வாயில் தண்ணீரோடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காட்டாற்று வெள்ளம் கால்வாயில் கலந்த மழை வெள்ளம், 18ஆம் கால்வாய் வழித்தடத்தில் ஓடியது. இதனால் 18-ம் கால்வாய் நீர் வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கினால் கம்பம் அருகே உள்ள தொட்டி பாலம் உடைந்து வெள்ள நீர் அடித்துச் சென்றது .

தண்ணீர் திறப்பு

இதனால் 18ம் கால்வாய் வழித்தடத்தில் நீர் நிறுத்தப்பட்டது. தேவாரம் பகுதியில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பாததால் கடந்த ஆண்டு மானாவாரி விவசாயிகள் சரியாக விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

தொட்டி பாலம் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கான ஆணையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பதினெட்டாம் கால்வாயில் நாளொன்றுக்கு 98 கன அடி தண்ணீர் வீதம் 30 நாளுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் திறந்து விடுவதற்கான ஆணையை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி லோயர் கேம்பில் உள்ள பதினெட்டாம் கால்வாய் தலைமதகிலிருந்து தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால் பாண்டி, தாசில்தார் அர்ஜுனன், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர்கள் ஏராளமானோர் முன்னிலையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் போடி மற்றும் தேவாரம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும் எனவும் கால்நடைகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் எனவும், பதினெட்டாம் கால்வாயின் தண்ணீரை பயன்படுத்தி காய்கறி விவசாயம் செய்ய முடியும் எனவும் தேவாரம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் எப்போதெல்லாம் முல்லை பெரியாற்றில் தண்ணீர் அதிகரித்து செல்கிறதோ அப்போதெல்லாம் பதினெட்டாம் கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டால் போடி சுற்றுவட்டாரப் பகுதியில் செழிப்படையும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி