Home /theni /

Theni | முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- வெள்ள அபாய எச்சரிக்கைவிடுப்பு

Theni | முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- வெள்ள அபாய எச்சரிக்கைவிடுப்பு

மாதிரிப்

மாதிரிப் படம்

Theni local news | முல்லைப் பெரியாறு அணை 135.90 அடியை எட்டியதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் , கரையோர பகுதி மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணை 135.90 அடியை எட்டியதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், கரையோர பகுதி மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணை

    தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல குமுளி அருகே உள்ள முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வருகிறது. கன மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளது .

    அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் ஜூலை 15ஆம் தேதி நிலவரப்படி, பெரியாறு அணைக்கட்டு பகுதியில் 84.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதனைத் தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து 8,143 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,789 கன அடியாகவும், அணையின் மொத்த நீர்மட்டம் 133.20 கன அடியாகவும் இருந்தது.

    ஜூலை 16ஆம் தேதி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து 6,700 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,867 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 135.0 அடியாகவும் இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் இரண்டடி உயர்ந்தது.

    ஜூலை 17ம் தேதி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து 3,737 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,867 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 135.65 கன அடியாகவும் இருந்தது.

    இன்றைய நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து 2,543 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,867 கன அடியாகவும், அணையின் மொத்த நீர்மட்டம் 135.90 கன அடியாகவும் இருந்து வருகிறது.

    முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது நீர் வரத்து குறைந்து இருந்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து ரூல்கர்வ் முறைப்படி உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் கேரள பகுதியான இடுக்கி மாவட்டம் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணித் துறையினர் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ்க்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளனர்.

    மேலும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக முல்லைப் பெரியாற்று பாதைகளாக வைரவனாறு, தொட்டமண்துறைய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி