ஹோம் /தேனி /

தேனியில் சாரல் மழை - சுருளி அருவியில் குளிக்க தடை  

தேனியில் சாரல் மழை - சுருளி அருவியில் குளிக்க தடை  

X
சுருளி

சுருளி அருவி

Theni | தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

சுருளி அருவி

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள்குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் மழை பெய்து நீர்வரத்து அதிககாணப்படுகிறது காட்டு நீரோடைகள் சுருளி அருவியில் கலந்து வெள்ளமாக கொட்டுகிறது.

தேனி : தி.மு.க அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்

இதனால்சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் சார்பாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் அருவி பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும்வர வேண்டாம் என கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni