Home /theni /

தேனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.! தற்போதைய நிலவரம் என்ன?

தேனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.! தற்போதைய நிலவரம் என்ன?

தேனி

தேனி

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. முல்லைப் பெரியாறு, வைகை அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.

மழைப்பொழிவு

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜூலை 12 ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து தினசரி அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக தேக்கடி மற்றும் முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

அணை


அதன்படி, பெரியாறு அணைப்பகுதியில் 43 மில்லி மீட்டர் மழை அளவும், தேக்கடியில் 28 மில்லி மீட்டர் மழை அளவும், கூடலூரில் 4.7 மில்லிமீட்டர் மழை அளவும், வீரபாண்டி பகுதியில் 3.2 மில்லிமீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 80.70 மில்லி மீட்டர் மழையளவும், சராசரியாக 6.98 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகியுள்ளது.

நீர்மட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய (11/07/2022) நீர்மட்டம் குறித்த விவரங்கள்.

முல்லைப் பெரியாறு


71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 55.32 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,612 கனஅடியாக உள்ளது. 969 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து, நீர் வெளியேற்றம் இல்லை.

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76.26 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. 03 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 28.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 5 கனஅடி.தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

142 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக உள்ளது. நீர்வரத்து 2,122 கன அடி. 1,611 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1,509 கன அடியாக உள்ளது. இந்நிலையில் இன்று 2,122 கன அடியாக நீர்வரத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி