ஹோம் /தேனி /

கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம் - தங்க மோதிரம் வழங்கிய திமுக நகரச் செயலாளர்

கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம் - தங்க மோதிரம் வழங்கிய திமுக நகரச் செயலாளர்

X
தங்க

தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு 

தேனி மாவட்டம் கம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

கம்பம் அரசு மருத்துவமனையில் நவம்பர் 27ஆம் தேதி பிறந்த ஏழு குழந்தைகளுக்கு , உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கம்பம் நகர செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் இலவசமாக தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கம்பம் நகர திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் நவம்பர் 27-ம் தேதி பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. திமுக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தேனி தெற்கு மாவட்டம் கம்பம் நகர திமுக சார்பில் கம்பம் நகர செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த 3 பெண் குழந்தைகள் 4 ஆண் குழந்தைகள் மொத்த 7 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் வீதம் 7 தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் அந்த ஏழு குழந்தைகளுக்கும் ரொக்க பணம், பெட்சீட், குழந்தைகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கம்பம் இளைஞர் அணி வசந்தன், மாவட்ட துணைச் செயலாளர் குருஇளங்கோவன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அரசேந்திரன், கம்பம் நகர துனண சேர்மன் சுனேதா செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni, Udhayanithi Satlin