முகப்பு /தேனி /

தேனி மாவட்டத்தின் 2வது பெண் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா - பதவி ஏற்றவுடன் என்ன கூறினார் தெரியுமா?

தேனி மாவட்டத்தின் 2வது பெண் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா - பதவி ஏற்றவுடன் என்ன கூறினார் தெரியுமா?

X
தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா

Theni Collector R.V.Shajeevana | தேனி மாவட்டத்தின் 2வது பெண் மாவட்ட ஆட்சி தலைவராக ஆர்.வி. ஷஜீவனா பதவி ஏற்றார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தமிழ்நாட்டில் விழுப்புரம், விருதுநகர், தேனி உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவிட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்து சமய அறநிலை துறை ஆணையராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் சார் - ஆட்சியராக இருந்த சஞ்சீவனா தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி மதுரை மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி 12-2-2001 ஆண்டு தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தை திறந்து வைத்தார். தேனி தனி மாவட்டமாக உருவாகியதில் இருந்து தற்போது வரை 17 ஆட்சியாளர்கள் தேனி மாவட்டத்தை ஆட்சி செய்து உள்ளனர். இதில் ஒரே ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் மட்டுமே தேனி மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார்.

தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பணி மாற்றுதல் அடிப்படையில் தேனி மாவட்டத்தின் 18வது மாவட்ட ஆட்சி தலைவராகவும், 2வது பெண் மாவட்ட ஆட்சி தலைவராக ஆர்.வி.ஷஜீவனா பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்ற ஆர்.வி.ஷஜீவனா தேனி மாவட்ட மக்களுக்காக களத்தில் இருந்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில் , முதலமைச்சர் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை ஒன்றை கொடுத்ததாகவும் தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த அறிக்கையின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து தீர்வு காண முயற்சி செய்வேன் எனவும், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தின்படி அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைந்து அனைவரும் பயன் பெறும் வகையில் நேரடியாக கள ஆய்வு செய்து நலப்பணிகள் துரிதமாக சென்றடைய நடவடிக்கை எடுப்பேன்” எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Theni