Home /theni /

Theni | பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி எரிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

Theni | பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி எரிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

தேனி அரசு மருத்துவமனை

தேனி அரசு மருத்துவமனை

Theni | பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி எரிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யும் நோக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் இடைக்கால நிவாரணமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 3,00,000 ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு நடந்த கொடூரம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி கடந்த ஜூன் இரண்டாம் தேதி தனது பாட்டியுடன் அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்யும் நோக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

இதில் 75 சதவீதம் படுகாயம் அடைந்த சிறுமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில் இந்த வழக்கில் விரைவாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அவரது சிகிச்சை மற்றும் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் தமிழக அரசு 3 லட்ச ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், அதில் ஒரு லட்ச ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2 லட்சம் ரூபாயை சிறுமியின் பாட்டியுடைய வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி