முகப்பு /தேனி /

உத்தமபாளையத்தில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரி சங்கம் துவக்க விழா 

உத்தமபாளையத்தில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரி சங்கம் துவக்க விழா 

X
உத்தமபாளையத்தில்

உத்தமபாளையத்தில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரி சங்கம் துவக்க விழா 

Theni District News | உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், பட்டதாரிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கான கல்வி சேவையை வழங்குவதற்காக இந்த ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி தேனி உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தாளாளர் தர்வேஷ் முகையதீன் தலைமையிலும், தேனி மாவட்ட அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் தேனி மாவட்ட உலமா சபையினர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “சிறு அமைப்புகள் மூலம் செய்ய முடியாத கல்வி சேவையை தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரி சங்கம் செய்ய வேண்டும். உத்தமபாளையம் பகுதியில் திறமை மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும்” என கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், இந்நிகழ்ச்சியில் கோட்டைமேடு பள்ளிவாசல் முன்னாள் தலைவர் அப்துல் ஜாபர், பெண்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni