ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

தேனி மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(ஜூலை 27) மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

  மின்வாரியம் சார்பில் மின் நிலையம், துணை மின் நிலையம், உப மின்நிலையங்களில் மாதமாதம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. மேலும், மின்வயர்கள், கம்பங்கள், மின்மாற்றிங்களிலும் உள்ள புதர், செடி கொடிகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் நடைபெறும் பொழுது குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் தடை செய்யப்படும்.

  இந்நிலையில், தேனி மாவட்டத்தில் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள வைகை அணை உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை

  சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர்: ராஜீவ்காந்தி.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Theni