Home /theni /

தேனியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

தேனியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andipatti Jakkampatti, India
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆண்டிபட்டி துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பெரியகுளம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஆண்டிபட்டி,
    டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி , பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி