ஹோம் /தேனி /

தேனியில் பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றதா? பொதுமக்கள் விமர்சனம் இதோ

தேனியில் பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றதா? பொதுமக்கள் விமர்சனம் இதோ

பொன்னியின்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கி முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வம் படம் இன்று வெளியாகி இருக்கும் சூழலில், தேனி மாவட்ட மக்களின் கருத்து என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம் ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

மணிரத்னம் இயக்கி முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வம் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ள படமாக பொன்னியின் செல்வன் படம் இருந்தது. பரவலாக படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்துவருகின்றனர். தேனி மாவட்ட மக்களின் கருத்து என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்

பொன்னியின் செல்வன்

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெவ்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிடப்பட்டிருந்தாலும் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் 90% விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வனுக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்

கார்த்தி, ஜெயம் ரவி, சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடிப்பிலும் மணிரத்தினத்தின் இயக்கத்திலும், ஏ ஆர் ரகுமான் இசையிலும் பிரம்மாண்டமாக உருவாகி இன்று வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

பொன்னியின் செல்வன் ரசிகர்கள்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி வரலாற்று சரித்திர படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, பண்ணைபுரம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது .

பாசிட்டிவ் விமர்சனங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து தேனி மாவட்ட மக்கள் கூறுகையில், ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்த அளவைவிட மனதிற்கு பிடித்த படமாக உள்ளதாக ஒரு சிலர் கூறினர்.

பொன்னியின் செல்வன் ரசிகர்கள்

தேவையான இடங்களில் மட்டுமே வி எஃப் எக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி மிக தெளிவான இயக்கத்தால் அசத்தி உள்ளார் மணிரத்தினம் எனவும், ஏ ஆர் ரகுமான் பின்னணி இசையில் கலக்குவதாகவும், பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் ஸ்டைலில் இயக்கி உள்ளதாகவும் பொதுமக்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

ஐந்து புத்தகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை இரண்டே பாகங்களில் சுருக்கி திரைப்படமாக இயக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை எனவும் படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டுமே வைத்து மிகவும் நேர்த்தியான இயக்கத்தில் மணிரத்தினம் திரைப்படத்தை இயக்கி உள்ளதாகவும் கூறினர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni