ஹோம் /தேனி /

Theni | பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் சிவனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம்

Theni | பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் சிவனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம்

தேனி

தேனி பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 லிட்டர் பாலினால் பிரம்மாண்ட அபிஷேகம் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Periyakulam, India

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 லிட்டர் பாலினால் பிரம்மாண்ட அபிஷேகம் செய்யப்பட்டது.

மகாலட்சுமி திருக்கோயில்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் ஒவ்வொரு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோயில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர். பிரதோஷ நாளில் நடைபெறும் அபிஷேக வழிபாட்டை காண பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

அந்த வகையில் புரட்டாசி மாதம் முதல் பிரதோஷம் தினத்தை முன்னிட்டு மகாலட்சுமி கோயிலில் உள்ள அதிகார நந்தீஸ்வரன் சிலைக்கும், நாகராஜர் சிவனுக்கும் ஐந்து வகை சாதங்களை கொண்டும் பால் தயிர் பன்னீரைக் கொண்டும் பிரதோஷ சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நந்திக்கு அபிஷேகம்

இந்தப் பிரதோஷ வழிபாட்டில் மகாலட்சுமி சிவகாமி தாயாருக்கும் அதிகார நந்தீஸ்வருக்கும், நாகராஜனுக்கும் மற்றும் சிவனுக்கும் அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகிய பூக்களை கொண்டும், சிவனுக்கு 108 லிட்டர் பாலினால் பிரம்மாண்ட அபிஷேகமும் செய்யப்பட்டது.

நந்திக்கு அபிஷேகம்

புரட்டாசி மாத பிரதோஷ நாளில் சிவலிங்கத்தை வழிபடும்போது சிவனோட அருளும் நந்தீஸ்வரர் அருளும் கிடைக்கும் என்றும், மகாலட்சுமி கோயிலில் வழிபாடு செய்வதன் மூலம் நல்ல செல்வாக்கு கிடைக்கும் எனவும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும், பெண்களுக்கு நன்மைகள் கிடைத்து தொழில் வளர்ச்சி அடைவார்கள் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

பிரதோஷ வழிபாடு

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.

ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் அதிகமான பக்தர்கள் இக்கோவிலில் வழிபாடு நடத்தி செல்வது வழக்கமாக காணப்படும் நிலையில் புரட்டாசி மாத பிரதோஷ தினத்தில் பங்கேற்பதற்காக பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni