ஹோம் /தேனி /

தேனியில் மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி - முதல் பரிசை வென்ற போடி கூடைப்பந்தாட்ட அணி

தேனியில் மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி - முதல் பரிசை வென்ற போடி கூடைப்பந்தாட்ட அணி

X
கூடைப்

கூடைப் பந்து அணி

Theni basket ball competition | தேனியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப் பந்தாட்ட போட்டியில் போடி அணி முதல் பரிசை வென்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் இரவு பகல் ஆட்டமாக மின் ஒளியில் மூன்று நாட்கள் மாவட்டஅளவில் நடைபெறும் கூடைப் பந்தாட்ட போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டதில், இறுதி போட்டியில் போடி கூடைப் பந்தாட்ட கழக அணியினர் 63 புள்ளிகளுக்கு 58 என்ற புள்ளி கணக்கில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

கூடைப்பந்தாட்ட போட்டி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் போடி கூடைப் பந்தாட்டசங்கத்தினர் சார்பாக மூன்று நாட்கள் இரவு பகல் ஆட்டமாக மின்னொளியில்கூடை பந்தாட்ட போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.

தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிபிசி போடி சிட்னி மைதானம் அணி, எல் எஸ் மில் அணி, சில்வர் ஜூப்ளி அணி, கூடலூர் பிரயண்ட், வடுகபட்டி பிபிசி அணிகள் உட்பட 18 அணிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியில் முதல் நாள் போட்டி நாக் காட் போட்டிகளாகவும் இரண்டாம் நாள் போட்டி லீக் மற்றும் அரை இறுதி போட்டிகளாகவும் மூன்றாம் நாள் இறுதி போட்டியாகவும் நடைபெற்றது.

பரிசளிப்பு

இதில் இறுதி போட்டியில் போடி கூடைப்பந்தாட்ட கழக அணியினரும், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியினரும் மோதினர். இந்தப் போட்டியில்போடி கூடைப்பந்தாட்ட கழக அணியினர் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியினரை 63- 58 புள்ளி கணக்கில் வென்றனர்.

தேனி பேஸ்ட் பால்

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போடி கூடை பந்தாட்ட கழக அணிக்கு முதல் பரிசாக 20,000 ரூபாய் ரொக்கப்பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது

இரண்டாம் இடத்தை பிடித்த பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியினருக்கு 15,000 ரூபாய் ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

தேனி தி மு க வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் முதல் பரிசையும் போடி நகர செயலாளர் புருஷோத்தமன் இரண்டாம் பரிசையும் போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜேஸ்வரி சங்கர் மூன்றாம் பரிசையும் வழங்கினர்.

முதல் மூன்று இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni