Home /theni /

இறந்தவர்களுக்கு ஒரு அடையாளம் இல்லாம வேதனைப்படுறோம்.. மயான வசதி இல்லாத பாளையம் புதூர் மக்களின் துயரம்..

இறந்தவர்களுக்கு ஒரு அடையாளம் இல்லாம வேதனைப்படுறோம்.. மயான வசதி இல்லாத பாளையம் புதூர் மக்களின் துயரம்..

உத்தமபாளையம்

உத்தமபாளையம் புதூர் கிராமம்

Uthamapalayam Pudur : தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதூர் பகுதியில் மாயனம் வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை சாலை ஓரங்களில் புதைத்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிக்கு உட்பட்டது புதூர் காலனி. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.  குடிநீர், பள்ளிக்கூடம், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இது குறித்து பல முறை அரசிடம் மனு கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்கின்றனர். 

மயான வசதி இல்லை :-

குறிப்பாக 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வரும் இப்பகுதி மக்களுக்கு மயானம் என்பது இல்லை. இதனால் இவர்கள் உத்தமபாளையம் - மார்க்கையன்கோட்டை சாலை ஓரமாக இறந்தவர்களின் சடலங்களை புதைத்து வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை சாலையோரங்களில் புதைக்கும் பாளையம் புதூர் மக்களின் அவலம்..


மயானம் வசதி இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொள்பவர்கள், துர் சம்பவங்களில் மரணிப்பவர்களின் உடல்களை எரியூட்ட வசதி இல்லாததால் அச்சடலங்களையும் சாலை ஓரத்தில் புதைத்து விடுவதாக கூறுகின்றனர்.  சாலையோரங்களில் உடல்களை புதைத்து வருவதால், நாய்கள் தோண்டி, உடல்கள் சேதப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.  போதாக்குறைக்கு, சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தம் போது, ஜேசிபி இயந்திரங்கள் வைத்து புதைக்கப்பட்ட இடங்களிலும் சேர்த்து வாரி விடுவதால், புதைக்கப்பட்ட இடத்தில் தங்களின் விருப்பத்துக்குரியவர்களுக்கென ஒரு அடையாளமே இல்லாமல் போய்விடுகின்ற அவல நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

பாளையம் புதூர்


அரசு உதவ வேண்டும் :-

இது குறித்து புதூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் கூறுகையில், " நாங்கள் சுமார் 400 க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 100 ஆண்டுகளுக்கும் மேலாக மயான வசதி இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை சாலையோரத்தில் அடக்கம் செய்து வருகிறோம் .

எங்களுக்கு முறையான குடிநீர் வசதி இல்லை. இது குறித்து சமுதாய தலைவர் மற்றும் ஊர் மக்கள் சார்பில், அரசியல்வாதிகளிடமும், தேனி மாவட்ட ஆட்சியரிடமும்  மயானம் வேண்டி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாளையம் புதூர்


சாலையோரத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் அவலம் இனிமேலும் நீடிக்கக் கூடாது. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் , தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கின்றோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரசு அதிகாரிகள் உத்தமபாளையம் பகுதியில் உள்ள மயானத்தில் உடலை அடக்கம் செய்ய கூறுகின்றனர். 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானக் கரையில் இறந்தவர்கள் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய எங்களால் இயலவில்லை . எங்களது வழக்கப்படி இறந்தவர்களின் உடலை தோலில் சுமந்து கொண்டு சென்று தான் அடக்கம் செய்வது வழக்கம் . தலைமுறை தலைமுறையாக இந்தப் பகுதியிலேயே அடக்கம் செய்து பழக்கப்பட்டதால் இந்தப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு இடத்தை அரசாங்கம் எங்களுக்கு மயானத்திற்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம் " என்றார்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி