முகப்பு /தேனி /

தேனி : கூடலூர் தொட்டி பாலத்தில் விரிசல்- வீணாகும் தண்ணீர்

தேனி : கூடலூர் தொட்டி பாலத்தில் விரிசல்- வீணாகும் தண்ணீர்

X
வீணாகும்

வீணாகும் தண்ணீர்

Theni | தேனி மாவட்டத்தில் பதினெட்டாம் கால்வாய் தொட்டிப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகிறது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் பதினெட்டாம் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதையான தொட்டிப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், ஏராளமான தண்ணீர் வீணாகியும், பாலம் வலுவிழுந்து உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொட்டிப் பாலம்

தேனி மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 18-ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த 18-ம் கால்வாய் மூலம் சுமார் 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. மேலும், இக்கால்வாய் தண்ணீரை உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரப்பி, நிலத்தடிநீரை பெருகுவதோடு, நேரடியாக 4,614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

பாலத்தில் விரிசல்

மேலும், இந்த பதினெட்டாம் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதையான லோயர் கேம்பில் இருந்து கூடலூருக்கு செல்லும் வழியில் ஒரு பெரும் பள்ளம் உள்ளது. இந்தப் பாலத்தை தண்ணீர் கடந்து செல்வதற்காக ஒரு பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த பாலம் தொட்டிப் பாலம் என அழைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்தது.

ஆனால் தற்போது இந்த பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து தண்ணீர் அருவி போல் கொட்டி, ஏராளமான தண்ணீர் வீணாகிக் கொண்டுள்ளது. மேலும் அதிக அளவில் தண்ணீர் வீணாவதால் பாலத்தின் உறுதித்தன்மை வலுவை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பில்லர் உள்ள தரை மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் பாலம் உடையும் அபாயம் உள்ளது. தொட்டி பாலத்தில் விரிசல் உள்ள இடத்தில் மணல் மூட்டையை வைத்து தற்காலிகமாக மூடி இருந்தாலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி கொண்டு தான் உள்ளது .

பாலத்தின் உறுதித்தன்மை முழுமையாக வழுவிழப்பதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து பாலத்தின் துளைகளை அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Theni