ஹோம் /தேனி /

தேனி கூடலூரில் களைகட்டிய முத்தாலம்மன் கோவில் திருவிழா- மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

தேனி கூடலூரில் களைகட்டிய முத்தாலம்மன் கோவில் திருவிழா- மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

தேனி

தேனி முத்தாலம்மன் கோவில் விழா

கூடலூரில் முத்தாலம்மன் கோயில் திருவிழா, இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gudalur, India

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா, இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர்.

முத்தாலம்மன் திருவிழா

தேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் புகழ்பெற்ற கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கூடலூர் பகுதியில் ஒக்கலிகர் காப்பு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்களால் ஆண்டிற்கு ஒரு முறை முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தப்படும்.

முளைப்பாரியுடன் பெண்கள்

ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோயில் திருவிழாவை நடத்தினாலும் அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து வழிபடும் ஊர் திருவிழாவாக முத்தாலம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

முளைப்பாரியுடன் பெண்கள்

இந்த திருவிழாவிற்கு கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து முத்தாலம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

கடவுளை வணங்கும் பக்தர்கள்

இந்த நிலையில், இன்று கூடலூர் தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் முத்தாலம்மன் சிலையை களிமண்ணால் செய்து அச்சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் வளாகத்தில் வைத்து முத்தாலம்மனை ஊர் பொது மக்கள் வழிபடுகின்றனர்.

இன்றைய திருவிழா நாளில் பெண்கள் அதிகாலை முதலே மாவிளக்கு எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அம்மனுக்கு முளைப்பாரி, கரகம் போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்தியும் அம்மனை வழிபட்டனர்.

திருவிழா நாளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தோன்றுவதுடன், விழா நிறைவில் அம்மன் சிலையானது ஊருக்கு வெளியே உடைக்கப்படுவது வழக்கம்.

முத்தாலம்மன் கோயில் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனால் உற்சாக அலை கரை புரண்டு ஓடியது. இந்தத் திருவிழாவானது போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.

திருவிழா நடைபெறும் போது கரகாட்டம், தேவராட்டம், வண்டி வேஷம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு பெண்கள், முளைப்பாரி, பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். மேலும், விழா கமிட்டி சார்பாக பொது மக்களை மகிழ்விப்பதற்காக வேட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வேட நிகழ்ச்சியில் கடவுள் வேடமிட்ட நபர்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகளில் சுற்றி வந்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni