ஹோம் /தேனி /

திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் - கம்பம் நகர்மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற காரசார விவாதம்

திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் - கம்பம் நகர்மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற காரசார விவாதம்

X
நகர்மன்ற

நகர்மன்ற கூட்டம்  

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் இடையே வாக்குவாதம், அதிமுக கவுன்சிலர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு என கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதங்கள் பல நடைபெற்றன

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர்மன்றக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு என கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதங்கள் பல நடைபெற்றன.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையிலும், நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வக்குமார் முன்னிலையிலும் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.நகரமன்றக்கூட்டத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற நிலையில், திமுக வார்டு உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலரான மாதவன், காமயகவுண்டன்பட்டி சாலையில் சாக்கடை கட்டாமல் கழிவுநீர் சாலையில் செல்கிறது.பலமுறை கூறியும் சாக்கடை கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. விரைவில் சாக்கடை கட்டும் பணிகள் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். வார்டு உறுப்பினர் கோரிக்கை வைத்த சாலையில் கழிவுநீர் சாக்கடை கட்டுவதற்கு நெடுஞ்சாலை துறையின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதி அளித்தார்.

வாக்குவாதம் :-

மேலும் கம்பம் பகுதிகளில் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். வார்டு பகுதிகளில் கொசு மருந்து முறையாக தெளிக்க வேண்டும். குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் விரைவில் சரி செய்ய வேண்டும். சேனை ஓடையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும். அங்குள்ள புதர்களில் இருந்து பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன இதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு உறுப்பினர்கள் நகரமன்ற தலைவரிடம் கூறினர்.

இதையும் படிங்க : ப்ரௌன் கேக்.. கிறிஸ்துமஸ் கேக்... குவியும் ஆர்டர்கள்.. தஞ்சையில் களைகட்டும் கேக் விற்பனை

விரைவில் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனைத்து தேவைகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என நகர் மன்ற தலைவர் கூறினார் .மைதீன் ஆண்டவர் புரம் பகுதியில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அருகே உள்ள தனது வார்டில் நிதி ஒதுக்க வில்லை என கூட்டத்தில் திமுக வார்டு உறுப்பினரான சுல்தான் சல்மான் பார்ஸி கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த 11-வது வார்டு கவுன்சிலர் சாதிக், தனது வார்டில் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகிறது, இதை யாருடைய தலையீடும் தேவையில்லை, எம்.எல்.ஏ. நிதியில்தான் எனது வார்டில் வேலைகள் நடைபெறுகிறது என்றார்.இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகரமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:  ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி

மேலும் நகர்மன்ற கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினால் முறையாக பதில் அளிக்காமல் இருப்பதாகவும் இதர நிர்வாகிகள் பின்னால் இருந்து புறம் பேசுவதாகவும் அதிமுக கவுன்சிலரான குரு குமரன் கூறியதால் சிறிது நேரம் நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.நந்தகோபால்சாமி நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள பூங்கா மற்றும் நடைபாதை எப்போது செயல்படும் என கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதில் தெரிவித்த கம்பம் நகராட்சி பொறியாளர் பன்னீர் கூறுகையில் , தமிழக முதல்வர் பூங்காவை விரைவில் திறந்து வைக்க உள்ளார் என பதில் அளித்தார் . கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் மொத்தம் 32 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தலைவர் மற்றும் அதிகாரிகள் விளக்கம் கூறினர்

First published:

Tags: Local News, Tamil News, Theni