தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்ற ஆர்.வி.ஷஜீவனா மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.
குறை தீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்டத்தின்ஆட்சித் தலைவராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலைத்துறை ஆணையாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக ஆர்.வி.ஷஜீவனா பிப்ரவரி 5-ம் தேதி பதவியேற்றார்.
தேனி மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றஆர்.வி.ஷஜீவனா தேனி மாவட்ட மக்களுக்காக களத்தில் இருந்து பணியாற்றஉள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பிப்ரவரி 6-ம்தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தேனிஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை பெற்றுக் கொண்டு அவர்களின் குறையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தேனியில் கொளுந்து விட்டு எரிந்த வாழை தோட்டம்.. தீயில் கருகிய செவ்வாழை மரங்கள்!
மேலும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு 6 தையல் இயந்திரமும், சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 5 தையல் இயந்திரம் என 11 தையல் இயந்திரமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 10 நபர்களுக்கு தேய்ப்பு பெட்டி என மொத்தம் 21 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni