முகப்பு /தேனி /

சின்னமனூர் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.. குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த தேனி மாவட்ட ஆட்சியர்..

சின்னமனூர் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.. குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த தேனி மாவட்ட ஆட்சியர்..

X
சின்னமனூர்

சின்னமனூர் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

Theni District Collector : வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துதேவன்பட்டியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் மற்றும் போடி - வலசத்துறை சாலையில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு திறப்பு விழா ஆட்சியர் நேரடியாக பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும், போடி வலசத்துறை சாலையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் மற்றும்

வீரபாண்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட முத்துதேவன் பட்டியில் ரூ.9 கோடியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீரபாண்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட முத்து தேவன் பட்டியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ள நிலையில் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துதேவன்பட்டியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் மற்றும் போடி - வலசத்துறை சாலையில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு திறப்பு விழா நிகழ்வுகளிலும் தேனி மாவட்ட ஆட்சியர் நேரடியாக பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துதேவன்பட்டியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் . இந்நிகழ்ச்சியில் தேனி தி.மு.க. வடக்கு செயலாளர் தங்கதமிழ்செல்வன், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ், வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் இருளப்பன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

First published:

Tags: Local News, Theni