ஹோம் /தேனி /

தேனி அன்னஞ்சி அரசுப் பள்ளியில் ‘வானவில் மன்றம்’ துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தேனி அன்னஞ்சி அரசுப் பள்ளியில் ‘வானவில் மன்றம்’ துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

X
வானவில்

வானவில் மன்றம் திட்டம்  

Theni News: தேனி அன்னஞ்சி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வானவில் மன்றத்தினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்  

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் உள்ள அன்னஞ்சி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வானவில் மன்றத்தினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

வானவில் மன்றம் திட்டம் :-

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், வானவில் மன்றத்தினை தொடங்கி வைத்தார்.

வானவில் மன்றம் என்பது அரசுப் பள்ளி மாணவர்களிடையே கேள்வி கேட்கும் திறனை அதிகப்படுத்துவதற்காகவும் , அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், ஆராய்ந்து பார்த்து செயல்படுத்துவதற்கான பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து , வ்தேனி மாவட்டம், அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றத் திட்டத்தினை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று குத்து விளக்கு ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் ஊஞ்சியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் மற்றும் துரை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

First published:

Tags: Local News, School students, Tamil News, Theni