ஹோம் /தேனி /

ரூ.1 லட்சம் பரிசுடன் ‘பசுமையாளர் விருது’: தேனி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

ரூ.1 லட்சம் பரிசுடன் ‘பசுமையாளர் விருது’: தேனி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தேனி கலெக்டர்

தேனி கலெக்டர்

Theni District Collecter : தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ரூ.1 லட்சம் வழங்கப்படும் ‘பசுமையாளர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் பசுமையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்.

பசுமையாளர் விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2022-ம் ஆண்டு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு, பசுமை தயாரிப்பு, திட கல்வி மேலாண்மை உள்ளிட்ட 12 செயல்களில் தங்களை அர்ப்பணித்த 100 பேருக்கு தழிழ்நாடு பசுமையாளர் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : கோவை வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ரத்து.. வழித்தடத்தில் மாற்றம்  - தெற்கு ரயில்வே அறிவிப்பு

விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு தேனி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni