Home /theni /

செப்.4ல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்- தேனி ஆட்சியர் அறிவிப்பு

செப்.4ல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்- தேனி ஆட்சியர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 4ம் தேதி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நடைபெறும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 4ம் தேதி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நடக்கிறது என்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் தனிப்பட்ட ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    இதையடுத்து, இந்தியா முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில், கடந்த 1.8.2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஆதார் எண் இணைக்கும் பணியை துரிதப்படுத்தும் பொருட்டு செப்டம்பர் 4-ம் தேதி சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    பொதுமக்கள் தங்கள் சுய விருப்பத்துடன் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைப்பதற்கு வழக்கமாக வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் வருகிற 4-ந் தேதியன்று சிறப்பு முகாம் நடக்கிறது.

    தங்கள் பகுதியில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி