Home /theni /

தேனியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி - முதல் பரிசு ரூ.5,000

தேனியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி - முதல் பரிசு ரூ.5,000

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டத்தில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.5000 வழங்கப்படுதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 15, 17ம் தேதிகளில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதலும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

    கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.3,000, 3-ம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.3,000, 3-ம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2,000 வீதம் வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி