Home /theni /

தேனியில் வெள்ள பாதிப்பு தொடர்பாக நாளை ஒத்திகை நிகழ்ச்சி

தேனியில் வெள்ள பாதிப்பு தொடர்பாக நாளை ஒத்திகை நிகழ்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனியில் பேரிடர் லோண்மை ஆணையம் சார்பில் மாதிரி ஒத்திகை பயிற்சி நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனியில் பேரிடர் லோண்மை ஆணையம், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை சார்பில், வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில அளவிலான மாதிரி ஒத்திகை பயிற்சி நாளை நடக்க இருக்கிறது என்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, தேனி மாவட்டத்தில் மாதிரி ஒத்திகைப் பயிற்சிகள் நாளை பெரியகுளம் வராகநதி, வீரபாண்டி முல்லைப்பெரியாறு, உப்புக்கோட்டை முல்லைப்பெரியாறு, குன்னூர் வைகை ஆறு, லோயர் கேம்ப்-குமுளி மலைச்சாலை என 5 இடங்களிலும் நடைபெறுகிறது. இதில், வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறைகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொது சுகாதாரத்துறை, தமிழ்நாடு மின்வாரியம் தொடர்பான அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

    முன்னெச்சரிக்கை செய்யும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, பாதுகாப்பாக வெளியேற்றும் குழு, நிவாரணம் மையம், பாதுகாப்பாக தங்க வைக்கும் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒத்திகைப் பயிற்சிகளை கண்காணிக்கும் பொருட்டு, துணை ஆட்சியர் நிலையில் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற பேரிடர்களின் போது அரசு துறைகளால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்படுகின்றன? மேற்படி பேரிடர்களின்போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது போன்ற ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெறவுள்ளதால், தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும், தங்கள் பகுதிகளில் நடைபெறும் மாதிரி ஒத்திகைப் பயிற்சிகளை பார்வையிட்டு, பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி