ஹோம் /தேனி /

தேனியில் 9ம் ஆண்டு ஐயப்பன் ரத ஊர்வலம்.. பரவசமடைந்த பக்தர்கள்!

தேனியில் 9ம் ஆண்டு ஐயப்பன் ரத ஊர்வலம்.. பரவசமடைந்த பக்தர்கள்!

X
பரவசமடைந்த

பரவசமடைந்த ஐயப்ப பக்தர்கள்

Theni District News : தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒன்பதாம் ஆண்டு ஐயப்பன் ரத ஊர்வலம் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், கூடலூர் ஐய்யப்ப பக்தர்கள் சார்பில் கூடலூர் பகுதியில் 9ம் ஆண்டு ஐயப்பன் ரத ஊர்வலம் நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் 9ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கூடலூர் கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் சபரிமலை சீசன் தொடங்கும் பொழுது அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினரும் ஐயப்ப பக்தர்களும் வழிபாடு நடத்தி பஜனை செய்வது வழக்கம்.

இந்தக் கோயிலில் இருந்து கூடலூர் நகரம் முழுவதும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கூடலூர் ஐய்யப்ப பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரத ஊர்வலமும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெறும்.அந்த வகையில் இன்று ஒன்பதாம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம் நடைபெற்றது.

இதையும் படிங்க : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!

ரத ஊர்வல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கூடலூர் ஐயப்பன் கோயிலில் தொடங்கிய ரத ஊர்வலம் கூடலூர் பகுதி முழுவதும் முக்கிய வீதியில் சுற்றி வந்தது. அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கூடலூர் ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடத்தப்பட்ட 9ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலத்தில் ஐயப்பனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை காணவும், ஐயப்பன் ரதத்தை இழுப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் கோயிலுக்கு வருகை புரிந்து வழிபாடு நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஊர் முழுவதும் சுற்றி தங்கள் இல்லம் வழியாக வந்த ஐயப்பன் ரதத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். 9ம் ஆண்டு ஐயப்பன் ரத ஊர்வலத்தை முன்னிட்டு கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Local News, Sabarimala devotees, Theni