ஹோம் /தேனி /

தேனியில் பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்  

தேனியில் பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்  

X
கண்டன

கண்டன ஆர்ப்பாட்டம்

Theni News | பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்கினால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் தென்னம்பிள்ளை மற்றும் தேங்காயுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தமிழ்நாட்டில் வருகின்ற தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உடன் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும்  என்றும்  தேங்காய் விவசாயிகளுக்கு நிர்ணயம் மற்றும் நிரந்தர விலை செய்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னம் பிள்ளை மற்றும் தேங்காயுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பொங்கல் தொகுப்பில் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிமடுத்து தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவது போல , அனைத்து பூஜைகளிலும் மற்றும் பண்டிகைகளும் பயன்படும் தேங்காய் பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டும் எனவும் , பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்கினால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்ற கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கிய பிறகு அங்கிருந்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.

First published:

Tags: BJP, Local News, Theni