ஹோம் /தேனி /

தேனியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு

தேனியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு

X
பெண்களுக்கு

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு

Theni District News : தேனி பங்களா மேட்டில் இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நீதிபதி மற்றும் கலெக்டர் விழிப்புணர்வு பேரணியை கொடி யசைத்து துவக்கி வைத்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

உலகில் பெண்களுக்கு குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, குழந்தை திருமணம் போன்ற துன்புறுத்தல்களை தடுக்கும் முயற்சியாக கொண்டு வரப்பட்டதே, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும்.

இத்தினமானது, கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி அன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக் கப்பட்டு வருகிறது.

அதன்படி தேனி மாவட்டம் தேனி பங்களா மேட்டில் இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட அமர்வு முதன்மை நீதியரசர் சஞ்சய் பாபு, தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதையும் படிங்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்.....

இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நீதியரசர் ராஜ்மோகன், தேனி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். ‌

இதில், பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து இப்பேரணியானது, பங்களா மேட்டில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் துவங்கி நேரு சிலை, பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் பள்ளி முன்பாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 100 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni