முகப்பு /தேனி /

தேனியில் வெளுத்து வாங்கும் மழை; உயர்ந்தது அணை நீர்மட்டம்.. எவ்வளவு தெரியுமா?

தேனியில் வெளுத்து வாங்கும் மழை; உயர்ந்தது அணை நீர்மட்டம்.. எவ்வளவு தெரியுமா?

X
தேனி

தேனி அணை

Theni heavy rain | தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து கொண்டே உள்ளது.

நீர்மட்டம் :-

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது .

71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 52.99 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 784 கனஅடியாக உள்ளது. 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 41.30 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து 31 கன அடியாக உள்ளது . நீர் வெளியேற்றம் 0 கண்ணாடியாக உள்ளது.

இதையும் படிங்க | தேனியில் தொடங்கியது வீரபாண்டி திருவிழா.. பக்தர்கள் பரவசம்!

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 7.16 கன அடி . 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 27.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 04 கனஅடி . தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.89 அடியாக உள்ளது. அனைத்து நீர்வரத்து 413 கன அடி. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dams, Heavy rain, Local News, Theni