Home /theni /

தேனியில் பஞ்சமி நிலம் மீட்புக்காக 3-வது நாளாக குடிசை போட்டு மக்கள் போராட்டம்

தேனியில் பஞ்சமி நிலம் மீட்புக்காக 3-வது நாளாக குடிசை போட்டு மக்கள் போராட்டம்

குடிசைப்

குடிசைப் போட்டு போராட்டம்

தேனியில் பஞ்சமி நிலத்தை மீட்பதற்காக 100-க்கும் மேற்பட்டோர் குடிசை அமைத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனியில் பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்திற்கு பட்டா போட்டு வழங்கியதை ரத்து செய்து தங்களுக்கு நிலம் வழங்க கோரி பொதுமக்கள் குடிசை போட்டு 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிசை போராட்டம்

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் 1925 ஆண்டு 11 ஏக்கர் பஞ்சமி நிலத்தை சின்ன காமன் என்பவருக்கு அரசு வழங்கியது. இதனை சின்ன காமன், 1941 ஆம் ஆண்டு மாற்று சமூகத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த இடம் வேறு சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு பட்டா மாற்றி கொடுக்கப்பட்டது.

குடிசைப் போட்டு தங்கியிருக்கும் மக்கள்


இந்தச் சூழலில் தங்கள் சமூக மக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட நிலத்தை மாற்று சமூகத்திற்கு பட்டா போட்டு வழங்கியதை ரத்து செய்யக்கோரி கடந்த சில ஆண்டுகளாக பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள்


இந்தச் சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்டோர் வடபுதுப்பட்டியில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தாங்களாகவே குடிசை போட்டு இடத்தை கையகப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள்


இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிசைப் போட்டு தங்கியிருக்கும் மக்கள்


பஞ்சமி இடத்தை மாற்று சமூகத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் சமூக மக்களுக்கு சொந்தமான இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தியும் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து இங்கேயே தங்கப் போவதாக இந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று 3-வது நாளாக அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், போராடும் மக்களை நேரில் சந்தித்து பேசினார். ஆனால் தங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடபோவதில்லை என மக்கள் தெரிவித்தனர். தங்களுக்கு நிலம் வழங்க கோரி பொதுமக்கள் குடிசை போட்டு 3வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி