Home /theni /

விளையாட்டு பூங்கா, வாரச் சந்தை- வளர்ச்சித் திட்டங்களால் கவனம் பெறும் கம்பர் நகர் மன்றத் தலைவர்

விளையாட்டு பூங்கா, வாரச் சந்தை- வளர்ச்சித் திட்டங்களால் கவனம் பெறும் கம்பர் நகர் மன்றத் தலைவர்

கம்பம்

கம்பம் நகர் மன்றத் தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகர் மன்ற தலைவராக வனிதா நெப்போலியன் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகர் மன்றத் தலைவராக பொறுப்பேற்ற வனிதா நெப்போலியன், கம்பம் நகரில் பொதுமக்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்வதோடு பல்வேறு திட்ட பணிகளை செய்து வருகிறார்.

நகர்மன்றத் தேர்தல்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இருபத்தி ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள ஏழு இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. கம்பம் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தி.மு.க தலைமை அறிவித்து, கம்பம் நகர மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் திமுகவைச் சேர்ந்த வனிதா நெப்போலியன்.

கம்பம் நகர் மன்றத் தலைவர்


கம்பம் நகர மன்றத் தலைவராக வனிதா நெப்போலியன் பதவி ஏற்றதில் இருந்து கம்பம் நகர வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளார் கம்பம் நகர மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன்.

கம்பம் நகரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்

கம்பம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டு, தற்போது கம்பம் நகரில் உள்ள நந்தகோபால நகரில் உடற்பயிற்சி கூடம், நடைமேடை உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சிறுவர் பூங்கா ரூபாய் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி தற்போது 90% பணிகள் முடிவடைந்துள்ளது.

கம்பம் நகர் மன்றத் தலைவர்


கம்பம் நகரில் வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இயங்கி வருகிறது. வாரச்சந்தை வளாகத்தில் காய்கறிகளை விற்பனை செய்ய போதிய வசதி இல்லாமல் இருந்த நிலையில், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கம்பம் நகராட்சியின் வருவாயை பெருக்குவதற்காகவும் வாரச்சந்தை வளாகத்தில் ரூபாய் 775 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 264 கடைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

கம்பம் நகர் மன்றத் தலைவர்


கம்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு மற்றும் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று, தற்போது கட்டிடப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் முகைதீன் ஆண்டவர் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல நகராட்சி ஆலமர தெருவில் உள்ள பள்ளியில் ரூபாய் 76 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடமும், 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி தேரடிப் பள்ளியில் பள்ளிக்கட்டடமும் கட்டப்பட்டு வருகின்றது.

கம்பம் உத்தமபுரம் பகுதியில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளது.

மக்கள் கையில் நகர மன்றம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, கம்பம் நகராட்சியில் உள்ள பிரச்சனைகளை பொதுமக்கள் எளிதாக தீர்த்துக் கொள்ளும் வகையில் whatsapp குருப் உருவாக்கப்பட்டு, அந்த வாட்ஸ் அப் செயலியில் பொதுமக்கள் தங்களின் குறைகளை பதிவு செய்தால் மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் நிவர்த்தி செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வார்டுக்கு இரண்டு நபர் வீதம் தேர்வு செய்து பொதுமக்களுக்கு தூய்மை தூதுவர் எனும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

எதிர்கால திட்டங்கள்

சுருளிப்பட்டி நீரேற்றம் நிலையத்தில் சுத்தமான குடிநீருக்காக சுத்தகரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூபாய் 252 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மையில் தினந்தோறும் கம்பம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் சுமார் 25 டன் குப்பையை உரமாக்குவதற்கு சுமார் 450 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது .

மேலும் நகரின் மையப்பகுதியில் ஓடும் சேனை ஓடையை தூர்வாரி இரு புறமும் கட்டிடப் பணிகள் மேற்கொண்டு அதன் இரு புறமும் சோலார் பேனல் அமைத்து மின் உற்பத்தி செய்திட வரைவு திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி