ஹோம் /தேனி /

திமுகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த கம்பம் கூடலூர் பகுதி - தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பேச்சு..

திமுகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த கம்பம் கூடலூர் பகுதி - தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பேச்சு..

தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பேச்சு

தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பேச்சு

Theni District News : திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டு தேனி மாவட்டத்திற்கு பேராசிரியர் அன்பழகன் செய்த நன்மைகள் பற்றியும் திமுகவிற்கும் கம்பம் பகுதிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி திமுக சார்பில் தமிழகம் எங்கும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

1977ம் ஆண்டு முதல் 43 ஆண்டுகளாக தொடர்ந்து திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் நீடித்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை பொதுக் கூட்டங்களாக நடத்தப்பட்டு அதில் அவரது புகழைப் பரப்ப திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டார். தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கம்பம் பார்க் திடலில் நடைபெற்றது.

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், கம்பம் நகர திமுக செயலாளர்களான சூர்யா செல்வகுமார், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதையும் படிங்க : தேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தேனி மாவட்டத்திற்கு பேராசிரியர் அன்பழகன் செய்த நன்மைகள் பற்றியும் திமுகவிற்கும் கம்பம் பகுதிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பேசினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றில் கம்பம் நகரம் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது தமிழகமெங்கும் வெடித்த மொழி போராட்டத்தில் கம்பம் கூடலூர் பகுதி மக்களின் பங்கு இன்றியமையாதது.

மொழிப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் மொழிப் போராட்டத்தில் முழுமையாக பொதுமக்கள் ஈடுபட்டு கம்பம் மற்றும் கூடலூர் பகுதி மக்கள் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டியாக அமைந்தனர் . 1967ம் ஆண்டு திமுக தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு காரணமாக கம்பம் பகுதி இடம் பெற்றதாக அன்பழகன் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மேடையில் குறிப்பிட்டார் பெரியசாமி.

ஒரு இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது அந்த இயக்கத்திற்கான வழிகாட்டியாக எப்பொழுதும் அந்த கழகத்தை வளர்த்த பகுதி இருக்கும். அந்த வகையில் திமுகவை பொருத்தவரை திமுக கழகத்தை வளர்த்த பகுதியாக கம்பம் கூடலூர் பகுதி உள்ளதாகவும் பெரியசாமி தெரிவித்தார்.

தென் மாவட்டங்களுக்கு உயர் கல்வி நிலையங்கள் அமைவதற்கு உடனடியாக அனுமதி அளித்தவர் பேராசிரியர் என்றும் கழகத்தின் அடிப்படை தொண்டன் முதல் தலைவர் வரை எளிதாக அணுகக்கூடிய எளிய மனிதராக வாழ்ந்தவர் பேராசிரியர் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேனி மாவட்டத்தில் உயர்கல்வி நிலையங்கள் பல அமைவதற்கு காரணமாக இருந்தவர் பேராசிரியர் அன்பழகன் எனவும் , நாடார் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு கல்லூரி வேண்டும் என்று அனுமதி கோரிய பொழுது மூன்றே மணி நேரத்தில் அனுமதி அளித்தவர் பேராசிரியர் அன்பழகன் எனவும், மாவட்டத்தில் உள்ள பல கிராமப்புறங்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி அமைவதற்கு காரணமாக இருந்தவர் என்றும், கம்பம் பகுதி மக்கள் மருத்துவ படிப்பு படிப்பதற்கு மருத்துவ கல்லூரியில் இடம் அளித்த பெருமை பேராசிரியர் அன்பழகனுக்கு உண்டு என கூறினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பொது கூட்ட நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தேனி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் குரு இளங்கோ, கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனேதா செல்வகுமார் நகர மன்ற உறுப்பினர்கள் கம்பம் சாதிக், அபிராமி, அன்பு குமாரி , மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni