இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு நிலை வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் பார்வையாளரான அயல்நாடு வாழ் மனிதவள நிறுவன மேலாண்மை இயக்குனர். C.N.மகேஷ்வரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முரளீதரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் முன்னிலையில் நடந்து வரும் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023 ஆம் ஆண்டுக்குரிய ஆலோசனைக் கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதையும் படிங்க : தேனியில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை.. எவ்வளவு தெரியுமா?
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி 1.1. 2023 ஆம் ஆண்டு தேதியை தகுதி நாளாக கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் பணிகள் நடைபெற்ற நிலையில் தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 5, 42, 411 ஆண் வாக்காளர்களும், 5, 63, 631 பெண் வாக்காளர்களும், 193 இதர வாக்காளர்களும் மொத்தம் 11 லட்சத்து 06 235 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியின் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு வாக்காளர் பட்டியல் பொறுப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்காளர் தாசில்தார் ஆகியோர் அரசியல் கட்சியினர் உறுப்பினர் கேள்விகளுக்கு பதில் அளித்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் துரை சார்ந்த அலுவலர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni