ஹோம் /தேனி /

கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா - தேனியில் நடைபெற்றது

கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா - தேனியில் நடைபெற்றது

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Theni District News | தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நகர்புற வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சமூக நலம் மற்றும் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பாக வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரங்களிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்ட வருகிறது. அந்த வகையில் இன்று தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தலைமையில் தேனி வட்டாரத்தில் உள்ள பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தேனி மற்றும் அதை சுற்றியுள்ள நகர் பகுதியைச் சேர்ந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு தாலி, சந்தனம் ,குங்குமம், தேங்காய் வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை சீதனமாக கொடுத்தும், பன்னீர் தெளித்தும் மலர்தூவி தூவி ஆரத்தி எடுத்தும் கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் தெரியுமா? - வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

பின்னர் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏழு வகை சாப்பாடும் வழங்கபட்டது. நிகழ்ச்சியின் தேனி நகர மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni