Home /theni /

தேனியில் 51 அரசுப் பள்ளிகளில் இனி காலை உணவு- இதுதான் உணவு வகைகள்

தேனியில் 51 அரசுப் பள்ளிகளில் இனி காலை உணவு- இதுதான் உணவு வகைகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் 51 அரசுப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டத்தில், க.மயிலை வட்டாரத்தில் உள்ள 51 அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரளீன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடன்
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது, ’க.மயிலை வட்டாரத்தில் உள்ள 51 அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 3 சுய உதவிக் குழு உறுப்பினா்கள் வீதம் மொத்தம் 153 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு காலை உணவு தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு வகை பட்டியலில் உள்ள பொருள்கள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக திங்கள் கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பாா், செவ்வாய்கிழமை சேமியா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பாா்,
புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பாா், வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பாா், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி, சாம்பாா், ரவா கேசரி
வழங்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகாமை திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்
பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் ரூபன் சங்கா் ராஜ், ஆட்சியரின் உதவியாளா்(சத்துணவு) தாமரைக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி