Home /theni /

தேனி : போராட்டக் களமாக மாறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- நடந்தது என்ன? 

தேனி : போராட்டக் களமாக மாறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- நடந்தது என்ன? 

ஆட்சியர்

ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வனவேங்கைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வனவேங்கைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திடீர் போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி, மதுரை சாலையில் வனவேங்கை கட்சி சார்பாக நரிக்குறவர் என்னும் ஜாதிப் பெயரில் குறவர் சொல்லை நீக்கிட வேண்டும். வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களால் வக்ரா போக்லி குருவிக்காரர் என உண்மையான ஜாதிப் பெயரைக் கொண்ட மக்களை, குறவர் ஜாதி பெயரை இணைத்து பழங்குடியின பட்டியலில் நரிக்குறவர் என்று சேர்க்க மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும்.

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்


நரிக்குறவர் நலவாரியம் என்னும் நலவாரிய பெயரில் குறவர் சொல்லை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்


அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேனி மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு முற்றியதால் ஏடிஎஸ்பி விவேகானந்தர் தலைமையில் போராட்டக்காரர்களை கைது செய்து பாதுகாப்பு போலீசார் வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால் தேனி மதுரை சாலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி