Home /theni /

தேனியில் 51 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

தேனியில் 51 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

மாணவர்களுடன்

மாணவர்களுடன் ஆட்சியர்

தேனி மாவட்டம் கடமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராஜேந்திரா நகரில் தொடக்கப்பள்ளியில் சிறுவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் கடமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராஜேந்திரா நகரில் தொடக்கப்பள்ளி சிறுவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15ஆம் தேதி மதுரையில் துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேனி மாவட்டத்திலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் கடமலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திர நகர் தொடக்கப் பள்ளியில் செப்டம்பர் 16ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து 94 சிறுவர்களுக்கு காலை உணவையும் பரிமாறினார். இத்திட்டம் தேனி மாவட்டத்தில் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் 51 அரசு தொடக்கப் பள்ளிகளில் 2,633 சிறுவர்களுக்கு காலை உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட ஊராட்சிகளின் தலைவர் பிரித்தா நடேசன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி