ஹோம் /தேனி /

சுய உதவி குழு பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனி ஆட்சியர்

சுய உதவி குழு பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனி ஆட்சியர்

X
தேனி

தேனி

Theni News : தேனியில் சுய உதவிக் குழு பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வி.கே.வேலுச்சாமி சின்னம்மாள் தனியார் மஹாலில் இன்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 113 சுய உதவிக் குழுக்களில் 1,441 பயனாளிகளுக்கு 7.77 கோடி ரூபாயும், போடி ஒன்றியத்தில் 94 சுய உதவிக் குழுக்களில் 1,107 பயனாளிகளுக்கு 4.47 கோடிரூபாயும் வழங்கப்பட்டது.

மேலும், சின்னமனூர் ஒன்றியத்தில் 76 சுய உதவிக் குழுக்களில் 943 பயனாளிகளுக்கு 6.15 கோடி ரூபாயும், கம்பம் ஒன்றியத்தில் 23 சுய உதவிக் குழுக்களில் 286 பயனாளிகளுக்கு 1.49 கோடி ரூபாயும், கடமலை / மயிலை ஒன்றியத்தில் 78 சுய உதவிக் குழுக்களில் 941 பயனாளிகளுக்கு 6.46 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..

பின்னர் பெரியகுளம் ஒன்றியத்தில் 200 சுய உதவிக் குழுக்களில் 2,400 பயனாளிகளுக்கு 10.42 கோடி ரூபாயும், தேனி ஒன்றியத்தில் 135 சுய உதவிக் குழுக்களில் 1,639 பயனாளிகளுக்கு 11.47 கோடி ரூபாயும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 99 சுய உதவிக் குழுக்களில் 1,192 பயனாளிகளுக்கு 6.66 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, நகர்புற பகுதிகளில் 118 சுய உதவிக் குழுக்களில் 1,376 பயனாளிகளுக்கு 6.44 கோடி ரூபாயும், பெரியகுளம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு 6 சுய உதவிக் குழுக்களில் 450 பயனாளிகளுக்கு 11.60 லட்ச ரூபாய் என மொத்தம் தேனி மாவட்டத்தில் 942 சுய உதவிக் குழுக்களில் 11,775 பயனாளிகளுக்கு 61.47 கோடிரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார், எம்எல்ஏக்கள் சரவணன் மகாராஜன், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni