ஹோம் /தேனி /

Theni | பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்களிடம் கடிந்துகொண்ட ஆட்சியர்

Theni | பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்களிடம் கடிந்துகொண்ட ஆட்சியர்

X
கவுன்சிலரிடம்

கவுன்சிலரிடம் பேசும் ஆட்சியர்

Theni | தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்களை ஆட்சியர் கடிந்துகொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தனியாரால் தொடங்கப்படவிருந்தமதுபானக்கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது என பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் தற்போது அதனை மீண்டும் வாபஸ் வாங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் அதிருப்தியில் கவுன்சர்களை கடிந்துள்ளார் .

மதுபான பார் விவகாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் தனியார்மதுபான பார் துவக்க அனுமதி வழங்கக் கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்கள் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இரண்டு நாள் கழித்து மதுபான பார் துவங்க தடை ஏதும் இல்லை எனவும், பிரச்னை இல்லை என்றும் கூறி தாங்கள் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

மதுபான பார் அனுமதி விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் கவுன்சிலர்கள் மனம் மாறியது பெரும் பேசு பொருளாகியது.

இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், நகராட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் பணி செய்ய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் முரளீதரனிடம் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்த பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்களிடம், "உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். மதுபான பார் அனுமதி வழங்க கூடாது கையெழுத்து போட்ட நீங்கள் அடுத்த இரண்டு நாளில் கையெழுத்திட்டு வாபஸ் வாங்குகிறீர்கள். கலெக்டருக்கு வேற வேலை இல்லையா?" என கடுமையாக கடிந்து கொண்டார்.

தேனி திம்மரசநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவுடன் சென்று வலியுறுத்திய கிராமத்தினர்..

தொடர்ந்து தற்போது கொடுத்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் முரளீதரன், "இந்த மனுவில் எந்த மாற்றமும் இல்லையே. கையெழுத்து போட்டதை வாபஸ் வாங்க மாட்டீர்களே’ எனக் கேட்டு உறுதி செய்துவிட்டு, இது குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் ஆர்டிஓ சிந்துவிற்கு உத்தரவிட்டார்.

First published:

Tags: Local News, Theni