ஹோம் /தேனி /

தேனி : 155 பயனாளிகளுக்கு ரூ.7 லட்ச மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தேனி : 155 பயனாளிகளுக்கு ரூ.7 லட்ச மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

X
நலத்

நலத் திட்ட உதவி வழங்கும் ஆட்சியர்

Theni | தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் 155 பயனாளிகளுக்கு ஏழு லட்ச ரூபாய்மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

நலத்திட்ட உதவிகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தெரிய வேண்டிய அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

குறிப்பாக குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும் குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள் மட்டுமல்லாது குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் தண்டனை உள்ளது என்பதை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர் விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட 12 திட்டங்களின் கீழ் 155 பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வழங்கினார்.

தேனி | சாலை விரிவாக்கத்தால் காத்திருந்த அழிவு- தாவரவியல் பேராசிரியரால் உயிர்தெழுந்த ஆப்பிரிக்கா நாட்டு கடவுள் மரம்

இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான மனுக்களை சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni