தேனி அருகே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மட்சய சம்பாடா யோஜானா திட்டத்தின் கீழ் ஆற்றில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதம மந்திரி மட்சய சம்பாடா யோஜனா திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் தேனி அருகே வீரபாண்டி முல்லை பெரியாற்று கரையோரம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமானது தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் பிரபாவதி மற்றும் உதவி இயக்குனர் பஞ்சராஜா முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் ரோகு, மிர்கால் வகை மீன்குஞ்சுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நாட்டு வகை மீன் குஞ்சுகளை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், வீரபாண்டி முல்லை பெரியாற்றில்விட்டு தொடங்கி வைத்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், இந்த நிகழ்ச்சியின்போது மீன்வளத்துறை அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni