Home /theni /

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுபவரா நீங்கள்- இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுபவரா நீங்கள்- இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாற்றுத்திறனாளிகள் பெறும் உதவித் தொகை தொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து உதவித்தொகையை பெற வாழ்நாள் சான்றிதழை உடனடியாயக சமர்பிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது.

    இதில், எழுபத்தி ஐந்து சதவீதம் மற்றும் அதற்கு மேல் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுதிறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், தண்டுவட மரபு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எனவே இதுவரை ஒப்படைக்காத பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இதற்கான படிவத்தை மாவட்ட நிர்வாகத்தின் www.theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி